Hosur Government Doctor Organises Community Baby Shower for 1,000 Pregnant Women | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Government Doctor Organises Community Baby Shower for 1,000 Pregnant Women

📅 வெளியீடு நாள்: 11-01-2026

📄 விளக்கம்

A government doctor working near Kelamangalam, Hosur, has been conducting community baby shower programmes for pregnant women for the past eight years. In 2023, the initiative reached 1,208 women and was recognised as a world record. This year, a similar event was organised in Denkanikottai for 1,000 women, earning public appreciation for its social impact.

ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு அரசு மருத்துவர், அமைதியாக ஒரு சமூக திருவிழா நடத்தி வருகிறார்.

அரசு மருத்துவராக பணிபுரிந்து வரும் சி. ராஜேஷ் குமார், கருவுற்ற பெண்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை சமூகப் பெரியவர்களின் பங்களிப்புடன் நடத்தி வருகிறார். புகழ்ச்சிக்காக அல்ல. அன்பிற்காகவும், மரியாதைக்கும்.

2023 ஆம் ஆண்டில் மட்டும், 1208 கருவுற்ற பெண்களுக்கு இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி, அது உலக சாதனையாகவும் பதிவானது.

இந்த ஆண்டு, தேன்கனிக்கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில், 1000 கருவுற்ற பெண்களுக்கு "சமுதாய வளைகாப்பு திருவிழா" இன்று முற்பகலில் நடைபெற்றது. தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன் இதில் கலந்து கொண்டார்.

சுற்றுவட்டார அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து, தங்கள் குடும்ப விழாவைப் போல
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

இந்த மனிதநேய முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads