Hosur Traders Question Uniformity of Encroachment Removal Drive on Denkanikottai Road | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Traders Question Uniformity of Encroachment Removal Drive on Denkanikottai Road

📅 வெளியீடு நாள்: 20-07-2026

📄 விளக்கம்

The ongoing encroachment removal drive by the Hosur Corporation has prompted questions from traders on Denkanikottai Road, who say they support the initiative but seek uniform enforcement.

According to the traders, action was taken against even minor structures in some locations, while larger permanent structures that they allege encroach onto the road have not faced similar action. They have urged the Corporation to clarify the criteria followed during the drive and ensure that all commercial establishments are treated equally under the law.

"ஓசூர் மாநகராட்சி ஏன் ஓரவஞ்சனையாக செயல்படுகிறது?" என கேள்வி எழுப்பும் தேன்கனிக்கோட்டை சாலை தொழில் முனைவோர்!

கடந்த சில நாட்களாக ஓசூர் நகரின் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேன்கனிக்கோட்டை சாலையிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த நாள் மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் தொழில் முனைவோர் ஆக்கிரமிப்பு அகற்றுவதை வரவேற்கும் அதே வேளையில், சில கட்டிடங்கள் முன்பு மழை நீர் வடிகால் ஓடையின் மீது போடப்பட்டுள்ள மூடியை கூட அப்புறப்படுத்தும் மாநகராட்சி, சில இடங்களில் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்..

மேலும், தனியார் மருத்துவமனைகள் சட்டப்படி தொழில் முனையும் தொழிற்சாலைகள் என்ற நிலையில், லாப நோக்குகளுடன் இயங்கும் பொழுது, பிற தொழில் முனைவோரையும் இந்த மருத்துவமனைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவர்கள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாதது போல மாநகராட்சி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் மருத்துவமனை வண்டிகளை நிரந்தரமாக சாலையில் நிறுத்தப்படுவதாகக் கூறப்படும் குறிப்பிட்ட மருத்துவமனை மீதும், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதுகுறித்து மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"இதற்கு ஏதேனும் அரசியல் தலையீடு காரணமா என்பதையும் மாநகராட்சி தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் கூறினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads