Police Inspect Over 70 Residential Buildings Near Ashok Leyland Unit II in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Police Inspect Over 70 Residential Buildings Near Ashok Leyland Unit II in Hosur

📅 வெளியீடு நாள்: 19-07-2026

📄 விளக்கம்

Police carried out a large-scale inspection early on Sunday in Kumudepalli, near Ashok Leyland Unit II and Adhiyamaan College in Hosur.

The operation, led by ADCO Police Inspector Murali, covered more than 70 residential buildings, many of which accommodate migrant workers from northern India. According to police, the inspection was part of ongoing enforcement measures to monitor drug trafficking, drug abuse, and the illegal stay of foreign nationals in the Hosur region.

ஓசூர் அசோக் லேலாண்ட் இரண்டாம் அலகு அருகே, காலை 6 மணி முதல் அட்கோ காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஓசூர் அதியமான் கல்லூரி வளாகத்திற்கு அடுத்து அமைந்துள்ளது குமுதேப்பள்ளி குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பெருமளவு வாடகை செலுத்தி, ஏராளமான வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று காலை அப்பகுதியில் அமைந்துள்ள 70-ற்கும் மேற்பட்ட அத்தகைய குடியிருப்புகளில், திடீரென ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு, அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

ஓசூர் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு, சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டினர் குடியேற்றம் போன்றவை குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் காவல்துறையின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads