Fake Murder Plot Near Hosur Ends in Shocking Twist; Husband Found Alive in Karnataka | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Fake Murder Plot Near Hosur Ends in Shocking Twist; Husband Found Alive in Karnataka

📅 வெளியீடு நாள்: 04-12-2025

📄 விளக்கம்

A woman, her companion and a youth plotted to eliminate her husband near Hosur. After the wife lodged a delayed complaint, police investigation revealed a series of shocking twists — the “victim” was alive and working on a farm in Karnataka. Three have been arrested and another is being traced.

ஓசூர் அருகே நாடகம் போடுவது குற்றமா? தளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சீனிவாசன் புது மாப்பிள்ளை.. தோட்ட வேலை செய்து வரும் பாக்கியாவிற்கு சாமப்பா கணவர்.. 32 வயதுடைய பாக்கியாவுக்கு, 44 வயதுடைய நர்சரி பண்ணை உரிமையாளர் பால்ராஜுடன் நெருங்கிய பழக்கம். பாக்கியா மற்றும் பால்ராஜ் பழக்கத்திற்கு சாமப்பா இடையூறு என இருவரும் கருதி, "போட்டு தள்ள" முடிவெடுத்துள்ளனர். இதற்காக சீனிவாசனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். சீனிவாசன், சாமப்பாவை போட்டு தள்ளி விட்டதாக தெரிவித்துள்ளார். 10 நாட்களாக சமப்பாவை காணாத நிலையில், உறவினர்கள் வற்புறுத்தலால், பாக்கியா தனது கணவரை காணவில்லை என தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக புகார் தெரிவிக்காததன் நோக்கம் என்ன என, பாக்கியாவை பிடித்து காவல்துறையினர் கிடுக்குப் பிடி போட்டுள்ளனர். தனக்கும் பால்ராஜுக்கும் நெருக்கம் குறித்தும், சீனிவாசன் உதவியுடன் கணவரை போட்டு தள்ளியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சீனிவாசனை பிடித்து வினவியதில், சாமப்பா உயிருடன் கர்நாடக மாநிலம் தோட்டம் ஒன்றில் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. கதையில், Twist மேல Twist இருப்பதை உணர்ந்த காவல்துறையினர், சாமப்பாவை மீட்டு, குற்றத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு உதவிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads