Police Reportedly Seize 12 kg of Suspected Cannabis from Bengaluru–Salem Bus Near Hosur | Hosur News Update - Video
Police Reportedly Seize 12 kg of Suspected Cannabis from Bengaluru–Salem Bus Near Hosur
📅 வெளியீடு நாள்: 07-08-2026
📄 விளக்கம்
Police at the Zuzuvadi check post near Hosur reportedly seized around 12 kg of suspected cannabis from a parcel found beneath a passenger's seat on a Bengaluru–Salem bus. The passenger denied knowledge of the parcel, and the investigation is continuing. The incident also serves as a reminder not to accept bags or parcels from strangers while travelling.
பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பேருந்தில் வருவதில் இத்தனை வம்பு தும்புகளா?
கடந்த நாள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை, ஜூஜூவாடி சோதனை சாவடியில், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி சார் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில், பொட்டலம் ஒன்று இருப்பது கண்ட காவல் துறையினர், பயணியிடம் அது குறித்து வினவி உள்ளனர். அவர் பொட்டலம் குறித்து தனக்குத் தெரியாது என தெரிவித்த நிலையில், அதை காவலர்கள் ஆராய்ந்த போது, 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் அந்த பயணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உண்மையான குற்றவாளி வாய்ப்பை பயன்படுத்தி தப்பு உள்ளதாக தகவல்.
ஆகவே, பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பேருந்தில் பயணிக்கிறீர்கள் என்றால், உங்களிடம் யாராவது பைகலையோ வேறு எதையாவது கொடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உதவி செய்யப் போய் வீண் வம்புகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது!








