Kodakarai Villagers Near Hosur Seek Bus Service and Primary Healthcare Facility | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Kodakarai Villagers Near Hosur Seek Bus Service and Primary Healthcare Facility

📅 வெளியீடு நாள்: 30-01-2026

📄 விளக்கம்

Kodakarai, a village located inside the Ayyur forest area near Denkanikottai and Hosur, is connected by road but lacks bus connectivity. While schools function in the village, residents depend on forest department transport and must travel 35 km to reach Denkanikottai, paying ₹80 per trip.

With no basic healthcare facility available locally, villagers are requesting small bus services and the establishment of a Primary Health Centre. Volunteers say these facilities could help reduce social challenges in surrounding areas.

ஓசூர் அருகே மருத்துவமனை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, அய்யூர் காட்டுப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள ஊர் கொடகரை. இதனை சுற்றி, கரிசித்தாபுரம், தொட்டியூர், வரலன, குண்டுமார்த்த கொல்லை, புரவப்பன் கொல்லை, எரிமார்த்த கொல்லை, சந்திராயன் கொல்லை, கீழ் கோர்ட், கரகநெட்டி, மேல் கோச்சாவூர், கீழ் கோச்சாவூர், வலசி வட்டு, ஜேடு குழி, பெலமர் போர்ட், காடூர், ஆர்ட்டி கல், கரிமத்தூர், கொண்டுகரை என ஏராளமான சிற்றூர்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

அய்யூர் வனச் சோதனை சாவடியில் இருந்து, காட்டு வழியாக சுமார் 17 கிலோ மீட்டருக்கு கொடகரை வரை, தார் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடையாளமாக துவக்கப் பள்ளியும் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன.

இப்பகுதியில் கொடகரை போன்று, மற்றொரு மலை முகட்டில் அமைந்துள்ள ஊர் பெட்டமுகிலாலம். இரண்டு ஊர்களுக்கும் சுமார் 8 கிலோமீட்டர் அளவிற்கு பொதுவான சாலை உள்ளது. பெட்டமுகிலாலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. ஆனால் கொடகரைக்கு, பேருந்து வசதி இல்லை.

வனத்துறையினரின் போக்குவரத்து வசதியை சார்ந்த இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். தேன்கனிக்கோட்டை வரை 35 கிலோ மீட்டர் பயணத்திற்கு, 80 ரூபாய் கட்டணம் வனத்துறையினரால் வசூலிக்கப்படுகிறது.

மருத்துவத்துறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒப்பாக தமிழ்நாடு மருத்துவத்துறை விளங்குகிறது என்று தமிழகத்தின் பிற பகுதிகள் பெருமைப்பட்டு கொண்டாலும், இப்பகுதியில் வாழும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அடிப்படை மருத்துவத்திற்கு கூட, 35 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், இப்பகுதி மக்கள் வைக்கும் முதன்மையான கோரிக்கைகள் என்னவென்றால், அடிப்படையான பொது போக்குவரத்து வசதி. சிறிய வகை பேருந்துகளை இயக்கினாலும் போதுமானது. அடுத்ததாக மருத்துவ வசதி. துவக்க நிலை மக்கள் நல நடுவம் அமைத்துக் கொடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

பேருந்து வசதி மற்றும் மருத்துவ வசதி இப்பகுதிகளில் அமைந்தால், சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணம் போன்ற செயல்பாடுகளை தவிர்க்கலாம் என தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads