Hosur Near Shoolagiri: Road Accident Case Turns Into Murder Investigation After CCTV Clues | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Near Shoolagiri: Road Accident Case Turns Into Murder Investigation After CCTV Clues

📅 வெளியீடு நாள்: 09-08-2026

📄 விளக்கம்

A case initially reported as a road accident near Shoolagiri, Hosur, has reportedly turned into a murder investigation after police examined CCTV footage. The investigation reportedly raised questions about the circumstances surrounding the man's death and his wife's subsequent complaint. Police say their probe uncovered a suspected murder conspiracy involving another person.

ஓசூர் அருகே "சாலை விபத்தில் மரணம்" என்று பதியப்பட்ட வழக்கை, சூளகிரி காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியது எப்படி?

ஓசூர் அடுத்த சூளகிரி அருகே குண்டுகுறிக்கியில் ஜூலை 25 ஆம் நாள் இரவு, இரு சக்கர வண்டியில் பயணித்த தமது கணவர் அடையாளம் தெரியாத வண்டி மோதி சாலை விபத்தில் பலியானதாக 38 வயது ரூபா என்கிற பெண், 26 ஆம் நாள் பகலில் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கணவருடன் ரூபா பயணித்ததையும், ஆனால் விபத்து பகுதியில் இருந்து மாயமாகி, மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை கண்டறிந்தனர்.

காவல்துறையினர் தங்கள் பாணியில் மேற்கொண்ட விசாரணையில், ரூபாவின் கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கணவரை கொன்றதை கண்டறிந்தனர்.

துல்லியமாக துப்பறிந்த சூளகிரி காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads