Hosur Chain-Snatching Cases: Bengaluru-Area Postmaster Arrested After CCTV Investigation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Chain-Snatching Cases: Bengaluru-Area Postmaster Arrested After CCTV Investigation

📅 வெளியீடு நாள்: 18-09-2026

📄 விளக்கம்

Police have reportedly arrested a 26-year-old postmaster from the Bengaluru region in connection with three alleged chain-snatching incidents in Hosur. Investigators reportedly linked the cases through CCTV footage showing a similar method involving a black car and approaching women under the pretext of asking for directions.

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்... பெங்களூருவில் பணியாற்றும் போஸ்ட் மாஸ்டர் ஓசூரில் திருடர் ஆன கதை இது!

ஆனைக்கல்லைச் சேர்ந்த 26 வயது ஜீவன் குமார், ஒசக்கோட்டை பகுதியில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறாராம். கருப்பு நிற காரை எடுத்துக்கொண்டு நேராக ஓசூருக்கு வந்து, நகையை அணிந்தபடி சாலை ஓரம் நிற்கும் பெண்களிடம், அருகில் சென்று முகவரி கேட்பது போன்று பேச்சு கொடுக்க வேண்டியது. அசந்த நேரத்தில் செயினை பறித்துக் கொண்டு காரில் தப்பி விடுவது.

இப்படி ஓசூரில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருட்டை நடத்தினாலும், கருப்பு நிற கார், முகவரி கேட்பது, செயினை பறிப்பது, அதுவும் அடுத்தடுத்த நாட்களில்... சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில் மூன்றிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தளி மற்றும் நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். மத்திகிரி காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு. இதை தொடர்ந்து தங்களது தீவிரமான புலனாய்வின் மூலம் திருடனாக மாறிய போஸ்ட் மாஸ்டரை கைது செய்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads