Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்

ஓசூர் அருகே இருசக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை, கொடூரமான முறையில் இழுத்து அறுத்து, பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி காட்டுப் பகுதி நாட்டு நெடுஞ்சாலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

கணவருடன், இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, பல்சர் வண்டியில் வந்த 2 மர்ம நபர்கள் அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.

இதில், நிலைகுலைந்து போன அந்த தம்பதியினர் வண்டியில் இருந்து கீழே விழுந்தனர்.

அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற போது, இருக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையன், சிறிது தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர். இதில், அந்த பெண்ணுக்கு, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

அந்தவழியாக சென்றவர்கள், கணவன், மனைவியை மீட்டு சாலை ஓரமாக உட்கார வைத்தனர். உடனடியாக இதுகுறித்து, காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவலர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நகருக்குள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுவிடுவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வோரை நோட்டமிட்டு, வழிப்பறியில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: