Farmers Hold Protest and Rally in Hosur Over Proposed Land Acquisition | Hosur News Update - Video
Farmers Hold Protest and Rally in Hosur Over Proposed Land Acquisition
📅 வெளியீடு நாள்: 19-02-2026
📄 விளக்கம்
Farmers organised a protest and rally in Hosur, voicing concerns about proposed land acquisition linked to multiple development projects. Protesters claimed that agricultural lands across several villages may be affected, potentially impacting livelihoods. The rally began near the Tahsildar Office Road junction and proceeded toward Ram Nagar, with participants calling for administrative attention to their demands.
ஓசூரை அதிரவிட்ட உழவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி.
பல வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் சுமார் 120 ஊர்களைச் சேர்ந்த, லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக, நிலங்கள் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கூறி ஏராளமான உழவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றம் இழைக்காத ஒருவருக்கு தண்டனை வழங்கினால் அவரது மனநிலை எவ்வாறு இருக்குமோ, அதே போன்ற மனநிலையில், "எமது நிலங்களை கையகப்படுத்துவதால் எமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்" எனக் கூறி, வட்டாட்சியர் அலுவலகம் சாலை சந்திப்பில் துவங்கிய ஆர்ப்பாட்டம், ஊர்வலமாக, முழக்கங்கள் எழுப்பியவாறு ராம் நகர் வரை செல்ல இருக்கிறது.
ஓசூர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில், தங்களது பகுதிகளிலேயே பல்வேறு கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை இம்மக்கள் பதிவு செய்து வந்தனர். அரசு இது தொடர்பில் மௌனம் காத்து வருவதாகவும், வேறு வழியின்றி, ஓசூர் நகர தெருக்களில் பெரும் முழக்கங்களோடு இன்று தங்களது எதிர்ப்பை, அரசு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்துள்ளனர் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.








