Court Orders Attachment Proceedings at Hosur Tahsildar Office Over Land Compensation Dispute | Hosur News Update - Video
Court Orders Attachment Proceedings at Hosur Tahsildar Office Over Land Compensation Dispute
📅 வெளியீடு நாள்: 20-02-2026
📄 விளக்கம்
Attachment proceedings were reportedly initiated at the Hosur Tahsildar Office following a long-pending land compensation case related to the Kelavarapalli Dam irrigation canal project. The landowner had secured a court order for enhanced compensation, and subsequent non-payment reportedly led to the attachment directive. Court officials visited the office to carry out the order. Further administrative steps are awaited.
ஜப்தி செய்யப்பட்ட ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம். நாற்காலியை விட்டு எழுந்து சென்ற வட்டாட்சியர் குணசிவா?.
ஓசூர் சென்னத்தூரைச் சேர்ந்த சீனப்பா என்பவரின் நிலம், கெலவரப்பள்ளி அணை பாசனக்கால்வாய் அமைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. வழங்கப்பட்ட இழப்பீடு குறைவாக இருந்ததாக அவர் நீதிமன்றத்தை அணுகினார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
15 ஆண்டுகளாக கூடுதல் இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், நீதியரசர் சண்முகராஜன், ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆணையிட்டார்.
நீதிமன்ற ஆமினாக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அசையும் சொத்துக்களை ஜப்தி செய்தனர்.








