Hosur News, ஓசூர் செய்திகள் - வண்டியை திருடியவர் மறுநாள் அகப்பட்டார்

ஓசூரில், இரு சக்கர வண்டியை திருடிய வாலிபர் மறு நாளே கைது செய்யப்பட்டார்.

ஓசூர் தளி சாலையில் உள்ள அப்பாவு நகரை சேர்ந்தவர் அந்தோணி பிரின்ஸ் குமார்.  இவர் சரக்குகளை கையாளும்  நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த, 21 இரவு வீட்டின் முன், தனக்கு உரிமையான ஓண்டா டீரீம் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு வீட்டினுள் தூங்கியுள்ளார். மறு நாள் காலையில் எழுந்து பார்த்த போது வண்டியை காணவில்லை.

மர்ம நபர்கள் வண்டியை திருடி சென்றதை அறிந்த அந்தோணி பிரின்ஸ் குமார், கடந்த நாள் ஓசூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவலர்களின் விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஈர்தங்கல் பகுதியை சேர்ந்த அய்யப்பன், 22, என்பவர் வண்டியை களவாடி சென்றது தெரிந்தது.

அவரை காவலர்கள் கைது செய்தனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: