Hosur News, ஓசூர் செய்திகள் - ரகளையில் ஈடுபட்ட பாகலூர் காரர் கைது

பள்ளி வாயிலில் நின்று பள்ளி முதல்வரை தகாத வார்த்தைகள சத்தமாக கூறி ரகளையில் ஈடுபட்ட ஒருவரை பாகலூர் காவலர்கள் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் அருகே, பேரிகை, மாருதி நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்(40).

உழவரான இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். பாகலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படிக்கின்றனர்.

கடந்த நாள் பள்ளிக்கு சென்ற லட்சுமி நாராயணன், பள்ளி பேருந்துகளை வெளியே செல்ல விடாமல் தடுத்து ரகளை செய்தார்.

ஏன் இந்த கூச்சல் குழப்பம் என கேட்ட சென்ற பள்ளி முதல்வர் டேவிஸ், 56, என்பவரை தனக்கு தெரிந்த அனைத்து மொழி தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து, டேவிஸ் பாகலூர் காவலர்களிடம் புகார் செய்தார்.

காவலர்கள் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாராயணனை கைது செய்தனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: