Hosur News, ஓசூர் செய்திகள் - தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி

கருநாடக மாநிலம் நந்தி மலையில் இருந்து துவங்கி தமிழகத்தில் கடலூரில் கடலில் சென்றடைகிறது தென் பென்னை ஆறு.

இந்த ஆறு, ஓசூர் பகுதிகளில் உள்ள உழவு நிலங்களுக்கு மட்டும் இன்றி, கிருட்டினகினி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என பல மாவட்டங்களில் உள்ள உழவு நிலங்களுக்கு பாசன் நீர் தருகிறது.

தற்பொழுது இந்த ஆற்றில் குறுக்கே ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் ஒரு அணையும், கிருட்டினகிரி அருகே ஒரு அணையும் உள்ளன.

கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள உழவு நிலங்கள் தென்பெண்ணை ஆற்றின் நீரை பெருமளவு பயன்படுத்தும் விதமாக ஆற்றின் குறுக்கே ரூ.18.8 கோடி மதிப்பில் இரண்டு இடங்களில் தடுப்பனை கட்டும் பணிகள் நடந்தேரி வருகின்றன.

1. பாரூர் அரசம்பட்டி அருகே ரூ.8.84 கோடி மதிப்பில் 145 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் 5.21 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்கும் வகையிலும்

2. பென்டர அள்ளியில் ரூ.9.24 கோடி மதிப்பில் 145 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் 3.56 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்கும் வகையிலும்

இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் ஆவணி திங்களில் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதனால், சுற்றியுள்ள ஊர்களில் நிலத்தடி நீர்மட்டும் உயரும். உழவு பெருகும்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: