ஓசூர் அருகே அக்ரகாரம் என்ற பகுதியில் கட்டிட வேலை செய்த கொத்தனார், தவறுதலாக மின் இணைப்பை தொட்டதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.
தருமபுரி மாவட்டம், பால்-சிலம்பு என்ற உரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (37).
இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீர்த்தம்மாள்(33). இருவரும் ஓசூர் அருகே அக்ரகாரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இன்நிலிஅயில் கடந்த நாள் (02.08.2019) அதே பகுதியில் ஒரு கட்டட பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை அர்ராய்ந்த மருத்துவர், வரும் வழியிலேயே கோவிந்தராஜ் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து, அவரது மனைவி ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்படி காவலர்கள் நிகழ்வு குறித்து விணவி வருகின்றனர்.








