Hosur News, ஓசூர் செய்திகள் - வெறிச்சோடிப் போன ஒகேனக்கல்!

ஆற்றில் தண்ணீர் வந்தாலும் அதில் மகிழ்வாக விளையாட ஆளே இல்லை!!!

வெறிச்சோடிப் போன ஒகேனக்கல்!

பள்ளிக்களுக்கான விடுமுறை கடந்த ஏப்ரல் தின்கள் முதல் சூன் 3 ஆம் நாள் வரை சுமர் 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டிருந்தது.

தற்பொழுது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (சூன் 16) குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களான கருநாடகம்,ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

அதற்கு முந்தைய கிழமையில் பெருங் கூட்டம் இருந்ததால் பலரால் ஒக்கேனக்கலின் இயற்கையை முழுமையாக அனுபவிக்க இயலாத நிலை இருந்தது.

எண்ணெய் குழியல், தலையான அருவி பகுதிகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக செல்ல முடிந்தது.

அருவியில் குளித்து முடித்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.

தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா,முதலைப்பண்ணை மற்றும் மீன் காட்சியகத்தில் வழக்கத்தைவிட  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.

சத்திரம், முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: