கொடுமை கொடுமை என்று புகலிடம் கேட்டு போனா, அங்க ரெண்டு கொடுமை நின்னு திங்குதுன்னு ஆடுச்சாம், என்கிற பழமொழிக்கு ஏற்ப, குருதிக்கொடை வழங்கும் குருதி கொடையாளர்களின் உயிரையே அச்சுறுத்தும் வகையில் ஓசூர் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி செயல்படுகிறது, என்கிற செய்தி தன்னார்வலர்களை அச்சமடைய செய்திருக்கிறது.
அரசின் மருத்துவ நடைமுறையின் கீழ், குருதிக்கொடை வழங்கும் குருதிக்கொடையாளருக்கு, ரத்தம் கொடுத்து முடித்த பின், Biscuit Packet மற்றும் ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறை.
ஜூஸ் மற்றும் பிஸ்கட் கொடுப்பதன் நோக்கம், குருதிக்கொடை வழங்கியவர், சோர்வு அடையாமல் மீட்சி பெற வேண்டும் என்பதற்காக. அவ்வாறு உடனடி சத்துக்கள் எடுக்காவிட்டால் சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டு விடுமாம்!
இந்த நடைமுறை ஓசூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நடைமுறையில் இல்லையாம்! அந்த பணம் யாருடைய பாக்கெட்டுக்கோ சென்று விடுகிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் ஆர்வமுடன் குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்கள்.
ஓசூர் ரத்த வங்கியின் மருத்துவர் திரு விஜய் இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது போது, பிஸ்கட் மற்றும் ஜூஸ், அரசு வழங்குவது இல்லை என்றும், அதை உள்ளூர் சந்தையில் தமது சொந்த பணத்தில் வாங்கி கொடுப்பதாகவும், அப்படி கொடுக்கப்படும் இவற்றிற்கு ஆறு மாதங்கள் ஆனாலும் பணத்தை தமிழ்நாடு அரசு செலுத்துவது இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது வெளிப்படையான குற்றச்சாட்டை வைக்கிறார்!
குருதிக்கொடை வழங்கியவருக்கு என்னதான் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, குடிக்க தண்ணீர் கொடுப்போம் என எவ்வித குற்ற உணர்வு தயக்கமோ இன்றி கூறுகிறார் மருத்துவர்.
தண்ணீர் கொடுத்தும் கொடையாளர் மயக்க நிலைக்குச் சென்று விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, குளுக்கோஸ் ஏற்றுவோம் என்று கூலாக பதில் சொல்கிறார்!
காசு பணம் துட்டு மணி மணி








