பெங்களூருவில், Purple, Green, Pink, Yellow, Blue என ஐந்து வெவ்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது Purple மற்றும் Green வழித்தடங்களில் மெட்ரோ தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. Yellow Line என்று அழைக்கப்படும் Metro பாதை R.V. சாலை முதல் ஓசூர் அருகே உள்ள பொம்மச்சந்திரா வரை அமைக்கப்படுகிறது.
இப்போது Yellow Line கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 2025 ஜனவரி கடைசியில் பொதுமக்களுக்கான தொடர்வண்டி போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூர் மற்றும் பெங்களூருவின் தென்பகுதியில் வாழும் பொது மக்களின் கோரிக்கையாக, அந்த வழித்தடம் தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும், என்பதாகும்.
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்களது கர்நாடக அரசியல் தொடர்புகள் மற்றும் நட்பை பயன்படுத்தி, Metro Rail பாதையை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்களும் தன்னார்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.








