ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், அடுத்தடுத்து கார்களும் லாரிகளும் மோதிக்கொண்டதில், பெரும் தொடர் விபத்து ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து ஏராளமானோர், தங்களது கார்களிலும், இரு சக்கர வண்டிகளிலும், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.
ஓசூர் கிருஷ்ணகிரி இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை, மலை பாங்கான ஏற்ற இறக்கங்கள் கொண்ட சாலை ஆகும்.
ஆறு வழிச்சாலையாக இது அமைக்கப்பட்டு இருந்தாலும், வண்டிகளை ஓட்டுபவர்களின் வேகம் மற்றும் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்கள், வண்டிகளை மிதமான வேகத்திலும், சாலை சட்ட திட்டங்களை மதித்தும் பயணிக்கும்படி தன்னார்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.








