Issojet Industries Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், முனைவர் கே ராமலிங்கம் அவர்கள், 2024, 2025ஆம் ஆண்டுக்கான இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ், ஓசூர் உள்ளூர் நடுவத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
அக்டோபரில் 2 நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், முனைவர் கே ராமலிங்கம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 24 ஆம் நாள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
2016ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பொறியாளர் விருது, அவருக்கு வழங்கப்பட்டது. முனைவர் கே ராமலிங்கம் அவர்கள், ஏற்கனவே பல ஓசூர் தொழில் முனைவோர் அமைப்புகளுக்கு தலைவராக பதவி வகித்து, ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு, சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








