ஓசூர் பிருந்தாவனம் நகரில், அமைந்துள்ள முருகன் கோவிலில், பன்னிரெண்டாம் ஆண்டு கந்த சஷ்டி மற்றும் இலட்ச்சார்ச்சனை பெருவிழா, நவம்பர் ஒன்றாம் நாள் முதல் துவங்கி நவம்பர் எட்டாம் நாள் வரை நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் மாலை 7.00 மணி அளவில், தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்கள் ஓதுவார் சுதாகர் அவர்களால் சிறப்பிக்கப்படுகிறது.
பிருந்தாவன் நகர் பிருந்தாவன் நகர், லட்சுமி நாராயண நகர், N G G Os காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் ஓசூரில் பிற பகுதிகளில் இருந்து திரளான மக்கள், இந்த சிறப்பு நாட்களில் ஆலயத்திற்கு வருகை புரிந்து, முருகனை வணங்கிச் செல்கின்றனர்.
ஆலய நிர்வாக குழுவினர், திருவாளர்கள் சேது, சுஜாதா, ராஜா, கிருஷ்ணன், அசோக், செல்வம், கண்ணன், பாபு மற்றும் பகுதி மக்கள், சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.








