தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டு, ஓசூர் மற்றும் பெங்களூர் நோக்கி பயணிக்கும் மக்கள், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வண்டிகளில் பயணிப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல், ஓசூர் கிருஷ்ணகிரி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து, மாற்றுப்பாதையான, தருமபுரி ஓசூர் புதிய நெடுஞ்சாலையில் பல ஆயிரம் வண்டிகளில் ஒரே நேரத்தில் பயணிக்க முற்பட்டதால், அந்தச் சாலையிலும், குறிப்பாக ராயக்கோட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
ஓசூரை அடுத்த, பெங்களூர் இலையான அத்திப்பள்ளி, சுங்கச்சாவடி பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இதற்கிடையே, தென் தமிழகத்திலிருந்து பெங்களூர் நோக்கி வரும் தனியார் பேருந்துகளில் நபர் ஒருவர் பயணிக்க, இருக்கைக்கு கட்டணமாக ரூபாய் 5000 வரை பெறப்படுவதாக பலர் புலம்புகின்றனர்.








