தமிழ்நாடு முழுவதும், கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டமான உழவர் சந்தை திட்டத்தின் கீழ் இயங்கும் உழவர் சந்தைகளில், இரண்டாவது மிகப்பெரிய சந்தை, ஓசூர் உழவர் சந்தை.
தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் ஒன்றாம் நாள், ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகளின் விற்பனை ரூபாய் ஒரு கோடி அளவை எட்டியது.
இந்த இரு நாட்களில் மட்டும், சுமார் 25,000 வாடிக்கையாளர்கள், காய்கறி வாங்குவதற்காக ஓசூர் உழவர் சந்தைக்கு வருகை புரிந்தனர்.
சுமார் இரண்டு லட்சம் கிலோ காய்கறிகள் இந்த இரண்டு நாட்களில் விற்பனை ஆகி உள்ளன. 400க்கும் மேற்பட்ட உழவர்கள் மற்றும் தொழில் முறை வியாபாரிகள், உழவர் சந்தையில் கடைகள் அமைத்து விற்பனையை மேற்கொண்டனர்.








