Hosur News, ஓசூர் செய்திகள் - கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்துள்ள, 86க்கும் மேற்பட்ட யானைகள்

கர்நாடகாவில் இருந்து 85 யானைகள் இடம் பெயர்ந்து, பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழக எல்லையில் முகாம். இரவு பகலாக ட்ரோன் கேமரா வாயிலாக தீவிர கண்காணிப்பு.

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்துள்ள, 85க்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழக எல்லை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஆண்டுதோறும், 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனச்சரகம் வழியாக, ஆந்திர மாநில வனப்பகுதி வரை சென்று விட்டு, மீண்டும் கர்நாடகாவிற்கு செல்வது வழக்கம். 

இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு சமீபத்தில் துவங்கியுள்ளது. 

இதில், ஜவளகிரி வனச்சரகத்தின் தளி வனப்பகுதியில், 30 க்கும் மேற்பட்ட யானைகளும், ஜவளகிரி வனப்பகுதியில், 35 க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. 

அதேபோல், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகார் காப்புக் காட்டில், 20 க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. ஒற்றை யானை தனியாக உள்ளது.

யானைகள் மீண்டும் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்தால், விவசாய பயிர்கள் சேதமாகும். அத்துடன் யானைகள் தாக்கி, மனித உயிரிழப்புகள் ஏற்படலாம்.

அதனால், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் மொத்தம், 80 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், ட்ரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டத்தை, இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: