ஓசூர் அதியமான் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில், 28 மாநிலங்களைச் சார்ந்த சுமார் 440 செஸ் விளையாட்டுப் போட்டியாளர்கள், இந்திய அளவில், 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியானது, நவம்பர் மூன்றாம் நாள் துவங்கி, வருகிற 11-ம் நாள் முடிவடைகிறது.
இந்த விளையாட்டு போட்டியை, மதுரை மாவட்ட செஸ் வட்டாரத்துடன் இணைக்கப்பெற்ற, ஆனந்தி செஸ் அகாடமியுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட செஸ் கழகத்துடன் இணைக்கப்பெற்ற, ஓசூரை சேர்ந்த வியூகம் செஸ் அகாடமி, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.








