கோயம்புத்தூர், தமிழகம் மட்டும் இன்றி, இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக, முன்மாதிரியாக பலவற்றில், திகழ்ந்தாலும், யானைகளை கட்டுப்படுத்துவதில், ஓசூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, தனது காட்டில் வாழும் யானைகளை காத்துக் கொள்ள இருக்கிறது.
கோயம்புத்தூர், மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலில், கடந்த ஆண்டுகளில், சுமார் பதினைந்து மனித உயிர்களும், இருபாதைந்திற்கும் மேற்பட்ட யானைகளின் உயிர்களும், பலியாகி இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோயம்புத்தூர் வருகை புரிந்து இருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள், யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருந்தார்.
அவரது உறுதி மொழிக்கு ஏற்ப, கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர், திரு என் ஜெயராஜ், ஓசூரை முன்மாதிரியாக கொண்டு, கோவையிலும் சுமார் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ஓசூரில் அமைக்கப்பட்டது போன்ற இரும்பு கம்பி வேலி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.








