Hosur News, ஓசூர் செய்திகள் - நுனி நாக்கு ஆங்கிலத்தில் நடைபெற்ற ஓசூர் மாநகர ஆட்சியின் வட்டார கூட்டங்கள்!

மூன்று ஆண்டுகளாக நடைபெறாத, ஓசூர் மாநகராட்சியின் வட்டாரக் கூட்டம், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், ஆங்காங்கே தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி, இரண்டு வட்டாரங்களுக்கு கடந்த நாள் நடைபெற்றது. 

இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர், நகர் நல அலுவலர், ஒன்று முதல் பத்து வரை உள்ள வார்டு பகுதியை சேர்ந்த, மாமன்ற உறுப்பினர்கள் பங்கு பெற்ற முதல் வட்டாரத்திற்கான கூட்டம் நடைபெற்றது. 

இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த வார்டு பகுதிகள் 11 முதல் 22 வரை உள்ளவற்றிற்கு, ஆனையாளர் மற்றும் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இதில் பேசிய மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், மாநகராட்சியின் துறை அலுவலர்கள், வட்டார கூட்டத்தில் பங்கு எடுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். 

கூட்டத்தில் பங்கெடுத்த, மாமன்ற உறுப்பினர்கள், தங்களது பகுதி குறைகளை, முறையாக எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்தனர். 

இனி ஓசூர் மாநகராட்சியின் வார்டு உறுப்பினராக இருக்க வேண்டுமாயின், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமோ?

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: