ஓசூரை அடுத்த சூளகிரி அருகே, சின்னாறு, பேடப்பள்ளி பகுதியில், இயங்கி வரும் மாதிரி மேல் நிலைப் பள்ளியில், மதில் சுவரை ஒட்டி, செடிகளுக்கிடையில், நூறு ஊசி போன்ற பற்களும், எலும்பை உடைக்கும் அளவிற்கு உடல் வலுவும் கொண்ட, மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதை மாணவர்கள் கவனித்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கோணிப்பையில் போட்டு, காட்டுப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.








