Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில், ஊடகத்தினர் இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் நேர்காணல் வழங்கினார்

ஓசூரில், ஊடகத்தினர் இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் நேர்காணல் வழங்கினார்.  அப்போது கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், மகாராஷ்டிராவை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமரும் என்றும் ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

வேதாந்தா குழுமம் குறித்து குறிப்பிட்ட அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தம் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் மீளுருதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு, முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பு என தெரிவித்தார்.  

அதிமுக என்கிற கட்சியை அழிப்பதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் ஒன்றியத்தை ஆளும் பாஜக மேற்கொள்வதாக வேதனை தெரிவித்தார்.  அதிமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்காத படி, பாஜக பல வகைகளில் முட்டு போடுவதாகவும், அதிமுகவை தமதாக்கிக் கொள்ள தம்மாலான எல்லா செயல்களிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும் பாஜகவை கடுமையாக சாடினார்.

திமுக உடனான விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதால், வலிமையான கூட்டணி என்றார்.  கூட்டணி குறித்து மேற்கொண்டு கேள்விகளை ஊடகத்தினர் எழுப்பிய போது, தேர்தல் நேரத்தில் தெளிவான விடை உங்களுக்கு கிடைக்கும் என்றார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: