Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மாநகராட்சி தான் மொத்த தமிழ்நாட்டிற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று

ஓசூர் மாநகராட்சி தான் மொத்த தமிழ்நாட்டிற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று என கடந்த நாள் நடைபெற்ற ஓசூர் நகர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சியின், பொது நல வாழ்வு குழு தலைவர் N S மாதேஸ்வரன் பேச்சு.

N S மாதேஸ்வரன் அவர்கள், ஓசூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசும் பொழுது, தமிழகத்திலேயே எந்த ஒரு மாநகராட்சியிலும் இல்லாத சிறப்புமிக்க திராவிட மாடல், மாநகராட்சி ஓசூரில் தான் உள்ளது. ஏனெனில், நாடாளுமன்ற உறுப்பினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவராகவும், சட்டமன்ற உறுப்பினர் கன்னட மொழியை தாய் மொழியாக கொண்டவராகவும், மாநகராட்சி மேயர் மலையாள மொழியை தாய் மொழியாக கொண்டவராகவும் திகழ்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய திராவிட மொழிகளும் கலந்த மாநகராட்சியாக ஓசூர் மாநகராட்சி திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

ஓசூர் மாநகராட்சியின் வரி வருவாய் உயர்த்துவதற்கு, ஓசூர் பேருந்து நிலையத்தின் தரச் சான்றிதழை பெறுவதற்கு நாட்களைக் கடத்தாமல், உடனடியாக அதன் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுங்கம் வரி பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துக் கூறினார்.

ஓசூர் சிப்காட் பகுதிகள், குடியிருப்பு பகுதிகளாக கணக்கிடப்படுவதால், ஓசூர் மாநகராட்சியால், தொழில் நிறுவனங்களுக்கு அதற்கான வரி விதிக்கப்பட இயலாமல் உள்ளது.  ஆகவே, உடனடியாக, ஓசூர் சிப்காட் பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் எங்கெங்கெல்லாம் நடைபெறுகிறது என கணக்கிட்டு, அந்த இடங்களுக்கான வரியை, தொழில் நிறுவனங்களுக்கான வரியாக மாற்றி அமைத்தால், ஓசூர் மாநகராட்சிக்கான வரி வருவாய் உயரும் எனவும், மாநகராட்சி அலுவலர்கள் இது தொடர்பில், மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கண்டிப்புடன் கூறினார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: