Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில், தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம்

ஓசூரில், தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் சார்பில் அதன் ஐந்தாவது மாநில பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ் குமாரவேலு பங்கேற்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில தலைவர், எம் செல்வம் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர், ஆசைத்தம்பி, மாவட்ட செயலாளர், பாஸ்கர், மாவட்ட பொருளாளர், தேவராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் பெட்ரோல் பங்குகளில், வாக்குவம் தொழில்நுட்பம் பயன்படுத்தி, இருசக்கர வண்டிகளுக்கு, இஞ்சின் ஆயில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதால், வண்டிகள் பாதிப்படைவது மட்டுமல்லாது, இந்திய அளவில் இருக்கக்கூடிய, இருசக்கர வண்டி பழுது நீக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதால், இந்த நடைமுறையை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்.

விபத்து காப்பீடு தொகைக்கு ஜி எஸ் டி 18 விழுக்காடு வரி பெறுவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ஆண்டுதோறும் மாதாந்திர அடிப்படையில் இருசக்கர வண்டிகள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு, பல்வேறு உயர் சிறப்பு சலுகைகளை வழங்குவதன் வாயிலாக, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு தடையாக, லாட்டரி விற்பனை தடை சட்டம் உள்ளது. பழுது நீக்கம் தொழிலாளர்கள், ஒன்றிய அரசின் சிறப்பு சலுகைகள் பெறுவதில் தடையாக உள்ள, தமிழ்நாடு அரசின் லாட்டரி தடைச் சட்டத்திலிருந்து, இருசக்கர வண்டி பழுது நீக்கும் தொழிலாளர்களுக்கு, விலக்கு அளிக்க  தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தானியங்கி ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வண்டிகள் நல வாரியத்தில், இருசக்கர வண்டி தொழிலாளர்கள் இணைக்க முடியவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள எங்கள் அமைப்பில், இந்த நல வாரியம் பயனளிக்கவில்லை என்பதால், எங்களுக்கு என்று தனியாக ஒரு நல வாரியத்தை அமைக்க வேண்டும்.

என தீர்மானங்கள், ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் குமாரவேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: