ஓசூர் திண்ணை வாசகர் வட்டம், பள்ளி மாணாக்கர்களிடையே புத்தகம் வாசிக்கும் திறனை வளர்க்கும் ஒரு முயற்சி. ஆண்டுதோறும் ஓசூரில் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி சார்பில், அவ்வப்பொழுது, ஓசூர் திண்ணை வாசகர் வட்டம், கூட்டம் நடத்தி, மாணாக்கர்களின் எழுதும் திறனையும், புத்தகம் படிப்பதற்கான ஆர்வத்தையும் வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாசகர் சந்திப்பு கூட்டம், பாகலூர் சாலையில் அமைந்துள்ள மெரினா புத்தகம் அங்காடியில், மாலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக குருகுலம் குளோபல் ரெசிடென்ஷியல் பள்ளியின் தலைமை ஆசிரியை என் புனிதா, சிப்காட் ஜேசிஐ ஓசூர் தலைவர் அப்பாஸ் பாஷா கலந்து கொண்டனர்.
மாநகரில் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவர் ப சண்முகம், ஓசூர் திண்ணை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் ச கார்த்திக், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் பெ சந்துரு, தமிழ் ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
58 ஆவது மாதாந்திர வாசகர் சந்திப்பு கூட்டத்தில், ஏராளமான மாணாக்கர்கள் பங்கெடுத்து, தாங்கள் எழுதி இருக்கும் புத்தகங்கள் குறித்து அறிமுகம் செய்து கொண்டனர்.








