Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே, சானமாவு காட்டுப்பகுதியில் நாற்பதற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

ஓசூர் அருகே, சானமாவு காட்டுப்பகுதியில் நாற்பதற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.  சாணமாவு காட்டுப்பகுதி, ஓசூர் ராயக்கோட்டை சாலையில், ஓசூரில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  ஆகவே, பொதுமக்கள் மற்றும் ராயக்கோட்டை வழி சாலையை பயன்படுத்தும் பயணிகளும் எச்சரிக்கையாக இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் கர்நாடக, காட்டுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட யானைகள், தனித்தனி குழுக்களாக பிரிந்து ஓசூர் சுற்றுவட்டார பகுதியில், பல்வேறு காட்டுப் பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.

அவ்வப்பொழுது இவைகள் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, தங்களின் உணவு தேவைக்காக விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக, யானைகள் இடப்பெயர்ச்சிக்கு பயன்படுத்தும் வழித்தடங்களில், மனிதர்கள் தங்களது குடியிருப்பையும், விளைநிலங்களையும் அமைத்துக் கொண்டதால், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் போக்கு ஆண்டுதோறும் ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது.

யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவற்றைக் காட்டுப் பகுதிகளை விட்டு வெளியேறாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வனத்துறையினர், பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ட்ரோன் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வனப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் பொருத்தி, யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு, ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புகாட்டிலிருந்து, 40 மேற்பட்ட யானைகள், நாகமங்கலம் ஊரை கடந்து, சானமாவு காட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்தன.

எனவே, சினிகிரிபள்ளி, அனுமந்தபுரம், D கொத்தப்பள்ளி, கொம்மேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள ஊர் மக்கள் பொதுமக்கள், உழவர்கள், கால்நடை மேய்யப்பவர்கள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமேன வனத்துறையின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: