ஓசூரில் திமுகவினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நாற்பத்து ஏழாவது பிறந்த நாளை கொண்டாடினர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 27 நவம்பர் 1977 சென்னையில் பிறந்தார். அவரது பிறந்தநாளை, இன்று ஓசூர் தி மு க வினர் கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த வகையில் ஓசூரில் மாநகர செயலாளர் மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த தி மு க வினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில், துணை மேயர் ஆனந்தையா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக தலைமை, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நன்மை தரும்படி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்ததால், ஓசூர் நகரில் கைவிடப்பட்டோருக்கு உணவு மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணாக்கர்களுக்கு நல உதவி ஆகியவற்றை தி மு க வினர் செய்து கொண்டாடினர்.








