ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான, ஒய் பிரகாஷ் அணிவித்தார். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நாற்பத்து ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை முதல், திமுக சார்பில் பல்வேறு இடங்களில், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்புடன் நடைபெற்று வந்தது.
இன்று மாலை சுமார் 7 மணி அளவில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து, இன்றைய நாளில் பிறந்த 11 குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் வீதம், தங்க மோதிரமும், பரிசு பொருட்களும் வழங்கினார்.
ஓசூர் மேயர் S A சத்யா, துணை மேயர் ஆனந்தையா, மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் யுவராஜ், உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ சங்கத் தலைவர், மருத்துவர் அன்பு உடன் இருந்தார்.








