Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே, உண்டு உறைவிட பள்ளியில் இருந்து, வைகறை பொழுதில்

ஓசூர் அருகே, உண்டு உறைவிட பள்ளியில் இருந்து, வைகறை பொழுதில், சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற, இரண்டு சிறுவர்கள்.  சிறார்கள், விடுதிகள் அல்லது வீடுகளில் இருந்து தப்பிச் செல்வது ஏன்? மன அழுத்தத்தின் பின்னணி என்ன? முதலில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

தேன்கனிகோட்டை சந்தை மேடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொலுமலை ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் குமார் மற்றும் பேரிகை அடுத்துள்ள காட்டுநாயக்கன் தொட்டி ஊரைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் தருண் ஆகிய இருவரும், பத்து வயது உடையவர்கள்.  இருவரும் நான்காம் வகுப்பு படிக்கின்றனர்.

மாணவர்கள் குமார் மற்றும் தருண் ஆகிய இருவரும் கடந்த நாள் வைகறை பொழுதில், அதாவது சுமார் 3 மணி அளவில், வளாகத்தின் சுவர் ஏறி குதித்து, வெளியே தப்பி ஓடிய காட்சியை சிசிடிவி பதிவுகளின் மூலம் கண்டறிந்தனர். விடுதிக்காப்பாளர், சிறார்களின் பெற்றோரிடம் தகவல் கொடுத்ததன் பேரில், பெற்றோர்கள், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில், தங்களது குழந்தைகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். காவல்துறையினருக்கு, மாணவர்கள் இருவரும் C பிக்கனப்பள்ளி பகுதியில் நடந்து செல்வதாக, தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற காவல்துறையினர், அவர்கள் இருவரையும் மீட்டு, பெற்றோர் மற்றும் விடுதி காப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

இத்தகைய நிகழ்வுகள் பல, அவ்வப்பொழுது செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.  உண்டு உறைவிட பள்ளிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா? இது குறித்து, மதுரையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். அதற்கு அவர்,

இந்தியாவைப் பொறுத்தவரை, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, உண்டு உறைவிட பள்ளி என்கிற நடைமுறை இருந்து வருகிறது.  வரலாற்று நாட்களில், இத்தகைய பள்ளிகளை, குருகுலம் என்று அழைத்தார்கள்.  அத்தகைய பள்ளிகள், புத்தக அடிப்படை பயிற்றுவிப்பு முறையை பின்பற்றாமல், செயல்முறை கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.  மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் ஒரே விதமான கல்வி என்று இல்லாமல், மாணாக்கரின் திறமைகளை ஆசிரியர் முதலில் புரிந்து கொண்டு, மானாக்கரிடம் இருக்கும் திறமையை வளர்த்தெடுப்பதாக கல்வி அமைந்திருந்தது. இன்று, மாணாக்கர்களின் தனித்தன்மை அடிப்படையில் கல்வி வழங்கப்படாமல், பொதுவான கல்வியாக அனைவருக்கும் ஒரே விதத்தில் பயிற்றுவிக்கப்படுவதால், மாணாக்கர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.  அதனாலேயே இத்தகைய தப்பிச்செல்லும் மனநிலை ஏற்படுகிறது.

சிறார்களுக்கு, வீட்டை விட்டு அல்லது தங்கியிருக்கும் பள்ளி விடுதியை விட்டு தப்பிச்செல்லும் மனநிலை ஏன் ஏற்படுகிறது?  கேள்விகளுக்கான விடையைத் தேடி, மனநல ஆலோசகர் முனைவர் யுவராஜ் அவர்களிடம், இது குறித்து கேட்டோம்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: