Hosur News, ஓசூர் செய்திகள் - கழுதையை உயிர் பலி கொடுத்த கொடூரம், ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே

கழுதையை உயிர் பலி கொடுத்த கொடூரம், ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே உள்ள கொத்தகொண்டபள்ளி ஊரில், கழுதை வளர்த்தவர் கதறி அழுதார்.  நேற்று நிறைந்த அமாவாசை என்பதாலும், இருள் கவ்விய நிலையில் இரவு இருந்ததாலும், உயிர் பலி கொடுத்து, பூஜை நடத்துவதற்கு ஏற்ற நேரம் என, மந்திரம் தந்திரங்கள் செய்பவர்களின் பேச்சைக் கேட்டு, இத்தகைய கொடூர நிகழ்வு நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அவ்வப்பொழுது, புதையல் வேண்டி யாகங்கள் வளர்ப்பது தொடர்கதையாகி வருகிறது. புதையல் கிடைக்க வேண்டும் என, உயிர் பலிகள் கொடுப்பதும் செய்தியாகி அவ்வப்பொழுது மக்களை பதட்டமடையச் செய்கிறது. சட்டத்திற்கு புறமான இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்கு, காவல்துறையினரும், வனத்துறையினரும் ஒன்றிணைந்து, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு, பத்து மாதம் கருவுற்று இருந்த கழுதை ஒன்றை, ரத்த பலி கொடுக்கும் நோக்கில், கழுதையின் கழுத்தை வெட்டி, தலைப்பகுதியை மட்டும் பூஜை செய்வதற்காக, மர்ம நபர்கள் சிலர், எடுத்துச் சென்றுள்ளனர் என, இது தொடர்பாக தெரிந்தவர்கள் கருத்து கூறுகின்றனர்.
சலவைத் தொழிலாளியான ஆனந், இருபதற்கும் மேற்பட்ட கழுதைகள், மதிகிரி அடுத்த கொத்தகொண்டபள்ளி ஊரில் வளர்த்து வருகிறார்.  அவர் தனது கழுதைகளை, ஊரின், ஏரிக்கரையோரத்தில், கொட்டகை அமைத்து, அதில் இரவு நேரங்களில் பூட்டி பாதுகாப்பது வழக்கம்.  பொதி சுமப்பதற்கு கழுதையை பயன்படுத்தும் ஆனந், கழுதையின் பால் கரந்து விற்பனையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல ஆனந், ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கதவு வழைக்கப்பட்டு,  இருந்ததை கவனித்துள்ளார். உள்ளே சென்று பார்த்த பொழுது, அனைத்து கழுதைகள் மீதும் ரத்தக்கரை இருந்துள்ளது. பெண் கழுதை, தலைப்பகுதி வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந், கதறி அழுத நிலையில், உதவிக்கு பிறரை அழைத்துள்ளார். கழுதையின் கழுத்தை வெட்டி, தலையை மட்டும், மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஆனந், இதுகுறித்து ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஓசூர் மத்திகிரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு, ஓசூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: