புயல் பெருமழையால் வெள்ளைக்காடாகி, சிக்கித் தவிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம். வெள்ளம் கடந்தார் போன்ற சாலைகள் என, மதுரையின் அகலமான சாலைகள் குறித்து, சங்கத் தமிழ் புலவர்கள் பாடிய பாடல்களை படித்திருக்கிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பு, புயல் கடந்தார் போன்று, என்று சொல்வது மிகையாகாது.
ஏனெனில் உண்மையிலேயே புயல் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்து செல்கிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சொல்லில் அடங்காது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்துள்ளதால், வெள்ளக் காடாக மாவட்டம் முழுவதும் காட்சி அளிக்கிறது.
மாவட்ட நிர்வாகம், முழு வீச்சில் செயல்பட்டு, வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை, பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர், மற்றும் மாநகர நகர் அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணியை பார்வையிட்ட போது.
சூளகிரி கும்பாழம் சாலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை JCB இயந்திரங்கள் கொண்டு சாலையை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது.








