வரும் சனிக்கிழமை, ஏழு, டிசம்பர், இரண்டாயிரத்து இருபத்தி நான்கு, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில, துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் ஒக்கிடுதல் மற்றும் மராமத்து பணியினால், அன்றைய நாளில் மின் பகிர்மானம் இருக்காது.
ஓசூர் அந்திவாடி துணை மின் நிலையம் சார்ந்த, டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், கரடி பாளையம், குதிரை பாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்த கொண்டபள்ளி, பொமண்டபள்ளி, முனீஸ்வரர் நகர், துவாரகா நகர் ஆகிய பகுதிகளில் அன்றைய நாளில் மின்தடை ஏற்படும்.
சூசுவாடி துணை மின் நிலையம் சார்ந்த, சூசுவாடி, மூக்கொன்டப்பள்ளி, பேகைப்பள்ளி, பேடரப்பள்ளி, Step காலனி, சின்ன எலசகிரி, முதல் சிப்காட், சிப்காட் குடியிருப்பு பகுதிகள், அரசனட்டி, சூர்யா நகர், பாரதி நகர், எம்ஜிஆர் நகர், வசந்தம் கார்டன், காமராஜ் நகர், எழில் நகர், ஆகிய பகுதிகளில் அன்றைய நாளில் மின்தடை ஏற்படும்.
மேலும், டைட்டான் துணை மின் நிலையம், மத்திகிரி துணை மின் நிலையம், பூனப்பள்ளி துணை மின் நிலையம், ஆகியவற்றிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அந்த துணை நிமிடங்கள் சார்ந்த பகுதிகளில் அன்றைய நாளில் மின் தடை ஏற்படும்.








