Hosur News, ஓசூர் செய்திகள் - கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், கோபிநாத் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், கோபிநாத் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், புயல் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.  இவர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், நேரில், மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர், ஆகிய பகுதிகளில், முடிந்தவரை அனைத்து பகுதிகளையும், நடந்தே சென்று முழுமையாக, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களை, நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு உடனடி தேவையான பொருட்களை உதவியாக, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.  நாடாளுமன்ற உறுப்பினரின் கள ஆய்வு, காலையில் துவங்கி, இன்று மாலை வரை நீடித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர், கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, அவருடன், மூத்த காங்கிரஸ் பொறுப்பாளர் மைஜா அக்பர், மாநில செயர்குழு உறுப்பினர் நீலகண்டன், காங்கிரஸ் தலைவர்கள், கணி, ரகு, ஏகம்பவாணன், ரகதமத்துல்லா, ஜேசுதுரை, ஆறுமுகம், சாதிக்கான், குமரேசன் மற்றும் திரளான காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: