ஓசூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், புரட்சித் தலைவி என்று அ தி மு க தொண்டர்களால் அழைக்கப்பட்டவரும், பெரும்பாலான மக்களால், அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், ஓசூர், ராயக்கோட்டை சாலை இருபத்தி ஒன்றாவது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, மறைந்த முன்னாள் முதலமைச்சரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில், நாற்பத்தி ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட, ஏராளமான அ தி மு க வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.








