Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே கள்ளக்காதலால் சீரழிந்த மனைவி

ஓசூர் அருகே கள்ளக்காதலால் சீரழிந்த மனைவி. ஓசூர் அருகே பேரிகையை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி பெயர் சுதா.  சுதாவிற்கும் வெங்கடாசலபதி என்பவருக்கும், கள்ளக் காதல் மலர்ந்துள்ளது.

சுதாவின், விகடாசலபதியுடனான கள்ளக்காதலை, கணவர் பாபு கண்டித்து வந்துள்ளார்.  பாபு தங்களது கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதிய சுதா மற்றும் வெங்கடாஜலபதி, அவர்களது கூட்டாளியான முனியப்பன் உடன் சேர்ந்து பாபுவை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, 2013ஆம் ஆண்டு, சுதா, அவரது கள்ளக்காதலன் வெங்கடாசலபதி, இவர்கள் இருவருக்கும் உடந்தையாக, முனியப்பன் என மூவருமாக சேர்ந்து, பாபுவை கொலை செய்தனர்.

கொலை தொடர்பாக பாகலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, குற்றவாளிகள் குறித்த தடயங்களை சேகரித்தனர்.

வழக்கை சிறப்பாக காவல் துறையினர் கையாண்டனர். குற்றவாளிகளான சுதா, வெங்கடாசலபதி மற்றும் முனியப்பன் ஆகிய மூவருக்கும், ஓசூர் குற்றவியல் நீதிமன்றம், அந்த நாள், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: