ஓசூரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் பெண் வீராங்கனை, 2028ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது லட்சியம் என சூளுரை. ஓசூரைச் சேர்ந்த 20 வயது சகானா, உலகளாவிய பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில், வீராங்கனையாக உள்ளார்!
இவர் 4ம் வகுப்பு படிக்கும் போது தனது 9 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு, தனது 12 வயதில் டேபிள் ஓசூர் ஆன்லைன், டென்னிஸ் விளையாட்டில் தங்கப் பதக்கத்துடன் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், ஜோர்டன் நாட்டில் நடைபெற்ற பாரா உலகப் போட்டியில், டேபிள் டென்னிஸ் போட்டியில் தனது 13 வயதில் உலக வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
உலக தரவரிசை பட்டியலை பொருத்தவரை, இவர், 2022ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஓசூர் ஆன்லைன், 8வது இடத்திலும், ஏசியன் கேம்ஸ் போட்டிகளில், 5வது இடத்திலும் உள்ளார்.
இந்த டிசம்பர் 1ம் நாள் முதல்,7 நாள் வரை, தாய்லாந்தில் நடைபெற்ற, உலக அளவிலான உலக திறன் இளையோர் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், ஓசூருக்கும், பெருமை சேர்த்து, சாதனை புரிந்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் வீராங்கனைகளின் அனைத்து பிரிவு தரவரிசை பட்டியலில், உலக அளவில், இவர் 17வது இடத்தில் உள்ளார். இளையோர் பிரிவில், முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் 2028ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில், முதல் இடத்தை பிடிப்பதே அடுத்த இலக்கு என தெரிவித்தார்.
ஓசூர் சாதனை பெண்ணிற்கு, அவர் எண்ணியது நிறைவேறி, வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ, ஓசூர் மக்கள் சார்பாகவும், ஓசூர் ஆன்லைன் சார்பாகவும், வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.








