ஓசூர் பாகலூர் அட்கோ குடியிருப்பு பகுதியில், சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் முன் நின்று சிறப்பித்த சுவாமி ஐயப்பன் பூஜை திருவிழா, மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓசூரில் பாகலூர் அட்கோ குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் சார்பில், 44 வது ஆண்டாக, குருசாமி பாலு அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுவாமி ஐயப்பன் பூஜைகள் திருவிழா நடைபெற்றது.
ஓசூர் பாகலூர் அட்கோ குடியிருப்பு பகுதியில், விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில், ஆண்டுதோறும் குருசாமி பாலு வழிகாட்டுதலின்படி, ஏராளமானோர், சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு, மாலை அணிந்து, விரதம் இருந்து, சென்று வருகின்றனர். தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக, கடந்த நாள், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தி பாடல்களை பாடி, சுவாமி ஐயப்பனுக்கு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் சிவனடியார்கள் பங்கேற்று, இனிய திருமுறை ஓதினர். இரண்டாம் நாள் நாள் காலை, கணபதி ஓமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், 18 படிகள் உண்மைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டு, அதன் மீது சுவாமி ஐயப்பன் உருவப்படத்தை வைத்து, பெரிய அளவிலான அலங்காரங்களுடன், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த ஐயப்ப சுவாமி விழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, மனமுருக ஐயப்பன் சுவாமி பாடல்களை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பாடி வழிபட்டனர். வந்திருந்த பக்தகோடிகளுக்கு, சிறப்பு உணவு வழங்கப்பட்டது.








