KPNtravels.in பெயரில் ஓசூர் மற்றும் தமிழ்நாடு முழுவது பயணிகளிடம் இணைய வழி மோசடி. கேபிஎன் டிராவல்ஸ் டாட் இன் என்கிற இணையம் முகவரியில் இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக பயணத்திற்கான முன் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. கட்டணங்கள் செலுத்துவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
கேபிஎன் டிராவல்ஸ் இணையதளத்தில், பணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகள், பயணிப்பதற்காக அவர்கள் குறிப்பிடும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால், பல மணி நேரம் காத்திருந்தாலும் பேருந்து வருவதில்லை. அருகில் இருக்கும் பிற டிராவல் ஏஜென்சிகளிடம் வினவினால், KPN பேருந்து இயக்கப்படுவது இல்லை என தெரிவிக்கின்றனர்.
கடந்த நாள், பெண் பயணி ஒருவர், ஓசூரில் இருந்து தனது மகளுடன், குன்னூர் செல்வதற்காக, கேபிஎன் டிராவல்ஸ் இணைய முகவரியில், பயணத்திற்கான முன்பதிவு செய்துள்ளார். இரவு 11 மணிக்கு ஓசூரில் இருந்து பேருந்து புறப்படும் என குறிப்பிட்டு இருந்த நிலையில், பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பலன மணி நேரம் காத்திருந்த பின், பேருந்து வராததை அறிந்து தொடர்பு கொள்ள முயன்ற பொழுது, கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்கள் எதுவும் வேலை செய்யவில்லை. அருகில் இருப்பவர்களிடம் வினவிய பொழுது, அப்படியான பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என தெரிய வந்தது.
இரவு நேரங்களில், குறிப்பாக பெண் பயணிகள் தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் வைத்துக் கொண்டு, பல மணி நேரம் காத்திருந்தபின், கேபிஎன் டிராவல்ஸ் டாட் இன் என்கிற இணையதளத்தில், கொடுத்திருக்கும் தொடர்பு எண்களுக்கு, தொடர்பு கொள்ள முயற்சி செய்தால், அவை அனைத்தும், செயலில் இல்லாத தொலைபேசி எண்கள் என தெரிய வருகிறது.
KPN ட்ராவல்ஸ் பொருத்தவரை, அவர்கள் செயல்பாட்டில் உள்ள பொழுதே, அவர்கள் மீது ஏராளமான வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர். இந்த நிலையில், செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வள்ளல், என்ற பழமொழிக்கு நேர் எதிர்மறையாக, கேபிஎன் டிராவல்ஸ் ஆற்றல் புரிந்து வருகிறது. அவர்கள் தங்களது தொழிலை முடக்கிக் கொண்டார்கள் என்றால், பயணிகளிடம் மோசடி செய்யும் நோக்கம் இல்லை என்றால், எதற்காக பேருந்து முன் பதிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? எதற்காக அதற்கான கட்டணங்களை அவர்கள் பயணிகளிடம் பெற வேண்டும்?
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும், பயணிகள் தங்களது நேரத்தையும், பயன திட்டங்களையும், வீணடித்துக் கொள்ளாத வகையில், மேலும் பெண் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கேபிஎன் டிராவல்ஸ் இன், இணைய வழி மோசடியை தடுத்து நிறுத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.








