Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் நகருக்குள் 6 காட்டு யானைகள் சுற்றுகின்றன.

ஓசூர் நகருக்குள் 6 காட்டு யானைகள் சுற்றுகின்றன.  வனத்துறையினர் யானைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.  பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடந்த நாள் இரவு, ஓசூர் காட்டுப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த யானை ஒன்று, மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் நுழைந்து விட்டது. அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் யானையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையை பயன்படுத்துபவர்கள், டைட்டான் டவுன்ஷிப் உள்ளிட்ட, மத்திகிரி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் வாழ்பவர்கள், எச்சரிக்கையுடன் இருங்கள். 

பல்லாயிரம் ஆண்டுகளாக, ஓசூர் வழியாக யானைகள் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்து செல்வது வழக்கம்.  மனிதர்கள் அவற்றின் பாதைகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டதால், யானைகள் பெரும்பாலும் இப்பகுதிகளுக்கு வருவது இல்லை. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, யானைகள் ஓசூர் நகர் வழியாக, தங்களது ஆண்டு புலம்பெயர்தலை அவ்வப்பொழுது நிகழ்த்துகின்றன. 

ஆகவே ஓசூர் நகர் பொதுமக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், நடமாடும் யானைகள் பெரும்பாலும், வளர்ப்பு யானைகள் அல்லாத காட்டு யானைகளாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  உங்கள் குடியிருப்பு பகுதியில் யானைகளை பார்த்தால், நெருங்கி செல்ல வேண்டாம். உதவிக்கு, 1 8 0 0 4 2 5 4 5 0 9, என்ற எண்ணை அழைக்கவும். 


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: