Hosur News, ஓசூர் செய்திகள் - மாவட்ட SP, ஓசூர் ASP, ஓசூர் Inspector கேக் வெட்டி புத்தாண்டு வருகையை கொண்டாடினர்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஓசூர் காந்தி சிலை முன்பு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஓசூர் காந்தி சிலை அருகே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பொதுமக்களும் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஓசூர் காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் ஓசூர் பகுதி காவல்துறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய ஆண்டு, ஓசூரில் குற்ற நிகழ்வுகள் நடைபெறாத ஆண்டாக அமையவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எனவும், காவல்துறையினரும், பொதுமக்களும், ஒருவருக்கு ஒருவர், வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: