Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் ஊர் பகுதி அருகே காட்டுயானையுடன் கொம்பன் யானை

ஓசூர் ஊர் பகுதிகளை தண்ணீர் மற்றும் உணவுக்காக நாடும் காட்டுயானை

ஓசூர் சூற்றுப் பகுதிகள் அடர்ந்த காப்புக்காடுகள் நிறைந்த பகுதியாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பகுதி காடுகளில் யானைகள் வாழ்ந்து வருகின்றன.

செவிட நாடு - முரசு நாடு என்றழைக்கப்பட்ட ஊர் பின் நாட்களில் பிற மொழி பேசுபவர்கள் வந்தேரியதால் ஓசூர் என்று பெயர் மறுவி, இன்று தமிழக அரசு மேற்கொள்ளும் தொழில் சார் வளர்ச்சி முன்னெடுப்பால், ஊர் பேரூராக விழங்குகிறது.

யானைகள் அதன் இருப்பிடத்தில் இருந்து மனிதர்களால் விரட்டி அடிக்கப்படுவது ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் நடந்தேரி வரும் ஒரு நிகழ்வாக நடந்தேரிவருவ்கிறது.

ஓசூர் ஊர் பகுதி அருகே காட்டுயானையுடன் கொம்பன் யானை ஒன்று சுற்றுத் திரிவதால் ஓசூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஓசூர்   அருகே காட்டுயானையுடன் கொம்பன் யானை ஒன்று சுற்றுத்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை, சீம எண்ணை (ஈக்கலிப்டச்) மர தோட்டம், என பல இடங்களில் சுற்றித்திரிந்த யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்த‌னர்.

இந்த நிலையில், தகவல் அறிந்துவந்த காட்டிலாகாவினர், யானையை பட்டாசுகள் வெடித்து விரட்டி அடித்தனர்.  

இதனால் யானைகள் உயிர் பயத்துடன் காட்டுப்பகுதிக்கு ஓடி ஒழிந்தன.  இது பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: