ஓசூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமக் கொடூரன். மூதாட்டி, மனம் குழம்பிய நிலையில், கடுமையான குருதிப்போக்குடன் மருத்துவமனையில் அனுமதி. 80 வயது மூதாட்டி ஒருவர், தனது கணவர் இறந்த நிலையில், உறவினர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். உறவினர்கள் கைவிட்ட நிலையில், ஓசூர் பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த அவர், 80 வயதில், உதவிக்கு ஆள் இல்லாமல், ஓசூர் பேருந்து நிலையத்தையே தனது வீடாக அமைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
மர்ம நபர் ஒருவர், மூதாட்டி இடம், ஏதோ ஒரு வாக்குறுதி கொடுத்து, தம்முடன் அழைத்துக் கொண்டு, சாண மாவு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கருதப்படுகிறது.
கடுமையான குருதிப் போக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டி, மனம் குழம்பிய நிலையில், முன்னுக்குப் பின் முரணாக தகவல்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர், தீவிரமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.








