Treasure Hunt Ritual Inside Protected Forest Near Denkanikottai; 7 Fined ₹1.75 Lakh | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Treasure Hunt Ritual Inside Protected Forest Near Denkanikottai; 7 Fined ₹1.75 Lakh

📅 வெளியீடு நாள்: 17-08-2026

📄 விளக்கம்

Around seven people allegedly entered a protected forest near Denkanikottai and conducted rituals reportedly linked to a search for buried treasure. The Forest Department detected the activity and reportedly collected a fine of ₹25,000 per person, totalling ₹1.75 lakh. Volunteers are urging authorities to prevent treasure-hunting activities from damaging protected forests and historical sites in the Hosur region.

ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்னுமா இதையெல்லாம் நம்புறாங்க?

புதையல் எடுக்க பூஜை போடுகிறோம் என ஏற்கனவே வரலாற்று தடயங்கள் ஏராளமானவற்றை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டு இப்போது அந்த கும்பல் ஓசூர் பாதுகாக்கப்பட்ட காடுகளை நோக்கித் திரும்பியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த நாள் தேன்கனிக்கோட்டை அருகே உணிசெட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7 பேர் கொண்ட கும்பல் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் எடுக்க பூஜைகள் நடத்தியதாகவும், வனத்துறையினர் கண்டறிந்து தலைக்கு 25,000 ரூபாய் வீதம் என ஒண்ணே முக்கால் லச்சம் ரூபாய் தண்டத்தொகை வசூலித்துள்ளனர்.

புதையல் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் ஏற்கனவே ஏராளமான ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதி கோவில்களும், வரலாற்று தடயங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழுக்கள் காடுகளுக்குள் செல்வதை சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads